ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06047) செப்டம்பர் 12-ல் சென்னையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.