திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காவலர் செல்வேந்திரனுக்கு விருது வழங்கிய பள்ளி நிர்வாகத்தினர். 
தமிழகம்

திருவாரூர் | ஆற்றில் விழுந்த ஆசிரியையை காப்பாற்றிய காவலருக்கு விருது வழங்கி பாராட்டிய பள்ளி

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரியில், ஆக.8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியை, அருகில் இருந்த புத்தாற்றில் தூக்கி வீசப்பட்டு, உயிருக்கு போராடினார்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற நன்னிலம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன், ஆற்றில் குதித்து நீச்சல் அடித்துச் சென்று, ஆசிரியையைக் காப்பாற்றினார். இந்தத் தகவல் வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, செல்வேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதையறிந்த திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் நேற்று காவலர் செல்வேந்திரனை நேரில் வரவழைத்து, பாராட்டி வெகுமதி வழங்கினார். இதேபோல, காவலர் செல்வேந்திரன் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் இணைந்து, இடர் மீட்ட இளையோன் என்ற விருதை செல்வேந்திரனுக்கு நேற்று வழங்கி கவுரவப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் வி.டி.சோமசுந்தரம் விருதை வழங்கினார். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர்(பொ) தியாகராஜன் வரவேற்றார். முடிவில், பள்ளிச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT