தமிழகம்

“காலத்தே மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி” - பிஹாரின் புதிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

செய்திப்பிரிவு

சென்னை: பிஹாரில் அமைந்துள்ள புதிய கூட்டணி அரசு "காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிஹாரில் அமைந்துள்ள புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிஹாரின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்விக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பிஹாரில் பெருங்கூட்டணியின் இம்மீள்வருகை நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT