தீபாவளி பண்டிகைக்கு சீன பட்டாசு விற்பனையை தடுக்கக் கோரி தாம்பரத்தை அடுத்த காமராஜபுரத்தில் தமிழ்நாடு நவ நிர்மான் சேனா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கே. சிவபாலன் தலைமை தாங்கினார்.
சீன பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் சிவகாசி பட்டாசு விற்பனை பாதிப்பதுடன் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு சீன பட்டாசை தடை செய்தாலும் 2000 கண்டெய்னர்களில் மறைமுகமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே சீன பட்டாசுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் அதன் விற்பனையை தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.