தமிழகம்

அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வில் பயன்படுத்த பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வை சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

1924-ம் ஆண்டு சிந்துவெளி நாகரிக அகழாய்வுக்கு பிறகு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை கீழடி அகழாய்வு ஏற்படுத்தியது. இந்த அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளதை தமிழக முதல்வர் தனது கவனத்தில் கொள்ள வேண்டும்.

கீழடியில் முதன்முதல் அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடு களை உலகுக்கு வெளிப்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது மத்திய அரசில் பணியாற்றுகிறார்.

அவரை தமிழகத் தொல்லாய்வுத் துறைக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று, கீழடி அகழாய்வில் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT