தமிழகம்

ஜெயலலிதாவை பார்க்க மோடி சென்னை வருகை?

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு நாட்களில் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது.

உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 16 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு நாட்களில் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க இருப்பதாக பாஜக முக்கிய தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் நேற்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT