ராம்குமாரின் உடல் 13 நாட்களுக்குப் பிறகு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். சிறையில் அவர் செப்டம்பர் 18-ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம் குமாரின் பிரேதப் பரிசோத னையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரேதப் பரிசோத னையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆனால், ‘டெல்லி எய்ம்ஸ் டாக்டர் உட்பட 5 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் பிரேதப் பரிசோதனை யில் இடம் பெறுவார்கள். அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேதப் பரிசோ தனை இன்று நடக்க உள்ளது.
இதுகுறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பொறுப் பாளரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டீனுமான நாராயணபாபு விடம் கேட்டபோது, ‘‘டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதீர் கே.குப்தா வந்ததும் 1-ம் தேதி (இன்று) பிரேதப் பரிசோதனை நடை பெறும்’’ என்றார்.