சுதந்திரப் போராட்ட தியாகிகள் மருது சகோதரர்களின் 215-வது குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மரி யாதை செலுத்தினர்.
மூமுக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மருது சகோ தரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறும்போது, “3 தொகுதி தேர்தலில் அதிமுக வுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் சு.திருநாவுக் கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஆர்.ராம சாமி, மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தி ஆகியோர் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத் தினர். முன்னதாக, மதுரை தெப் பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸுக்கு திமுக ஆதரவு தருகிறது. திருப்பரங்குன் றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இத்தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்பேன். நீதிமன்ற உத்தரவால் உள்ளாட் சித் தேர்தல் தள்ளிப்போகிறது. இருப்பினும், இத்தேர்தலிலும் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடரும் என்றார்.
புதிய பார்வை ஆசிரியர் எம்.என்.நடராஜன், திமுக முன் னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம், தமாகா மாநில பொதுச் செயலாளர் சுப.உடை யப்பன், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ், அஇமூமுக நிறுவனர் டாக்டர் என்.சேது ராமன் உள்ளிட்டோர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.