தமிழகம்

இளம் அறிவியலாளர், சாதனையாளர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு இளம் அறிவியலாளர், வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகளுக்கு நவம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது மற்றும் தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது ஆகியவை அறிவியல் நகரம் சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்கான முன்மொழிதல் படிவம் மற்றும் விண்ணப்பம், அடிப்படை தகுதிகள், விதிகள் ஆகியவை அறிவியல் நகர இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிதல் படிவம் மற்றம் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை அறிவியல் நகரத்துக்கு நவம்பர் 28-ம் அன்று மாலை 5 மணிக்குள் தபாலிலோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT