தமிழகம்

உசிலம்பட்டியில் ஆட்டோ மீது பேருந்து மோதி 4 பெண்கள் பலி

செய்திப்பிரிவு

மதுரை - குமுளி வரை நான்கு வழிச்சாலை பணி நடப்பதையொட்டி அந்த ரோட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப் பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்து 8 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று கட்டக்கருப்பன்பட்டி நோக்கிச் சென்றது. கலைச்செவன்(30) என்ப வர் ஆட்டோவை ஓட்டினார். கட்டக் கருப்பன் விலக்கில் திடீரென ஆட்டோ இடதுபுறமாக திரும்பி யது. அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியது.

இதனால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில், அருகில் ஆட்டோ வுக்கு காத்திருந்த உசிலம்பட்டி ஆணையூர் பாண்டியம்மாள்(40) மற்றும் ஆட்டோவில் பயணித்த கட்டக்கருப்பன்பட்டி தாயம் மாள்(70) சம்பவ இடத்தில் பலியா கினர். காயம் அடைந்த கட்டக் கருப்பன்பட்டி ராக்கம்மாள்(65), மேட்டுப்பட்டி ராமலட்சுமி(35), கணபதி(45), ராஜாங்கம்(70), வீரம்மாள்(70) ஆகியோர் உசிலம் பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராக்கம்மாள், ராமலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பேருந்து வருவதை கவனிக்காமல் ஆட்டோ ஓட்டுநர் அவசரப்பட்டு திரும்பியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். உசிலம்பட்டி தாலுகா போலீஸார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

விபத்து குறித்து அப்பகுதியினர் கூறும்போது, “நான்குவழிச் சாலை பணி குறித்து முறையான எச்சரிக்கை போர்டுகள் எதுவும் வைக்கவில்லை. மெயின் ரோட்டில் இருந்து கிராமங்களுக்கு பிரியும் விலக்கு பகுதியில் வாகனங்கள் மெதுவாக திரும்புவதற்கு ஏதுவாக வேகத் தடைகளை உருவாக்கவில்லை. விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT