தமிழகம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரலில் நடந்த கொள்ளை முயற்சியில், காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்தி உதவியாளராகவும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆசிரியராகவும் மருது அழகுராஜ் பணியாற்றி வந்தார். பின்னர், நமது அம்மா நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற அவர், சமீபத்தில் அதிலிருந்து விலகினார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மர்மம் உள்ளதாக மருது அழகுராஜ் பொதுவெளியில் கருத்து தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். மாலை வரை அவரிடம் விசாரணை நடந்தது.

SCROLL FOR NEXT