தமிழகம்

அதிமுக தொண்டர்கள் 2 பேர் தீக்குளித்து தற்கொலை

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்த வர் அதிமுக தொண்டர் ராஜ வேல்(21). கடந்த 4-ம் தேதி திடீ ரென தீக்குளித்துள்ளார். படுகாய மடைந்த அவரை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜவேல் சிகிச்சை பலனளிக் காமல் இறந்தார்.

தாம்பரம் கடப்பேரி மொளன நகரைச் சேர்ந்தவர் அதிமுக தொண் டர் சற்குணம் (31). காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் மெப்ஸ் சிக்னல் அருகில் நின்றுகொண்டு, ‘முதல்வர் ஜெயலலிதா குண மடைய வேண்டும். அம்மாவை காப்பாத்துங்க’ என்று கூறி தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT