தமிழகத்தில் பல ஊர்களில் நேற்று வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. காற்றில் ஈரப்பதமும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38 டிகிரி செல்சியஸ், வேலூரில் 37.8 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 36.8 டிகிரி செல்சியஸ், சென்னையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.