தமிழகம்

ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம்: பேருந்துகள் இயக்கி வெள்ளோட்டம்

செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு ஊரப் பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத் தத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்கி நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை யில் 5 தற்காலிக பேருந்து நிலை யங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி தென்மாவட்டங் களுக்குச் செல்லும் பேருந்துகளுக் காக ஊரப்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் பொன்முடி தலைமை யில் அதிகாரிகள் கடந்த வியாழன் அன்று ஆய்வு செய்தனர்.

தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அரசு தரப்பில் அனைத்து துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பேருந்து நிறுத்தம் அமையவுள்ள இடத்தில் இருக் கும் தேவையற்ற செடிகள் அகற்றப் பட்டு வருகின்றன. நேற்று செங்கல் பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் போக்குவரத்து துறை, காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆம்னி பேருந்து இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது.

தீபாவளி விடுமுறைக்கு முன்பு அனைத்து அடிப்படை வசதி களும் செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம் பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி வழியாக வெளிவட்டச் சாலையில் நேரடியாக ஊரப் பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் வந்தடையும்.

முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேடு அல்லது ஊரப் பாக்கத்தில் மட்டுமே பேருந்தில் ஏறிச் செல்ல முடியும். வேறு எங்கும் பேருந்து நிற்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT