தமிழகம்

தாய்லாந்து கிளப் தீ விபத்தில் 13 பேர் பலி; 40+ காயம்

செய்திப்பிரிவு

பேங்காக்: தாய்லாந்தில் கிளப் ஒன்றில் இன்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள சாட்டாஹிப் மாவட்டத்தில் மவுன்டெய்ட் கிளப் உள்ளது. இந்த கிளப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டினர் யாரும் இந்த விபத்தில் இறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல மணி நேரப் போராட்டங்களுக்கு பிறகு மீட்புப் படையினர் தீயை அனைத்தனர். கிளப்பில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், கிளப்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் தீயினால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

.

தாய்லாந்து இரவு கிளப்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த கோர விபத்து நடந்துள்ளது.

தாய்லாந்தில் 2009-ஆம் ஆண்டு சாண்டிகா கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 67 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT