தமிழகம்

செயற்கையாக காலியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு: தவிர்க்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: செயற்கையாக காலியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

செயற்கையாக காலியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், " நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தங்களுக்குக்கிணங்க ஒவ்வோர் ஆண்டும் காலதாமம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக தகுதியுள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கபட வேண்டும்.

சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ, அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது பதவி உயர்வுக்கான அவர்தம் முறை வரும் முன்னரோ பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலிப்பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதல் போன்ற செயல்கள் முற்றிலுமாக தவிர்க்கபட வேண்டும்" இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT