உள்ளாட்சித் தேர்தல் ரத்தானா லும் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க வேண்டாம்; மக்களை சந்தியுங்கள் என கட்சி நிர்வாகி களுக்கு திமுக மேலிடம் உத்தர விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இட ஒதுக்கீடு, தேர்தல் குறித்த அறிவிப்பாணைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரும் 17, 18-ம் தேதி நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தது. இந்தத் தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிமுக, திமுகவில் சீட் பெற்று வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்துக்கு புறப்பட்ட அக்கட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.
அதிமுக, திமுகவில் மாநக ராட்சி, நகராட்சி உள்ளிட்ட முக்கிய உள்ளாட்சி அமைப்புகளில் போட்டி யிட்டவர்கள் பிரச்சாரம், தேர்தல் அலுவலகம் திறப்பு, வேட்புமனு தாக்கல் வரை பல லட்சம் செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவித்தாலும் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், தேர்தல் அலுவலகம் திறப்பு என ஆரம்பம் முதல் செலவு செய்ய வேண்டும் என்பதால் இரு கட்சி வேட்பாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதற்கு கட்சித் தரப்பில் உத்தரவாதம் கொடுக் கப்படவில்லை. ஒரு புறம் தேர்தல் ரத்து, மற்றொரு புறம் அக்கட்சி யின் ஆணிவேரான முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அதிமுக வினர் சோகத்தில் உள்ளனர்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் மாறாதபட்சத்தில் தற் போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கள் பட்டியலில் மாற்றம் இருக்காது என திமுகவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. அதனால், “உள்ளாட்சித் தேர்தல் ரத்தானாலும், தேர்தல் பணியை அதே வேகத்தில் தொடருங்கள். தேர்தலுக்கு கால அவகாசம் கிடைத்துள்ளதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது, வெளியூர் வாக்காளர்களை கண்டு பிடிப்பது, தேர்தல் வியூகம் அமைப் பது உள்ளிட்ட களப்பணியில் ஈடுபடுங்கள்” என திமுகவின ருக்கு அக்கட்சி மேலிடம் தெரி வித்துள்ளாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி கள் கூறும்போது, “முன்பு 60 சதவீத உள்ளாட்சி இடங்களில் வெற்றி பெறுவதையே இலக்காக வைத்து தேர்தலை சந்தித்தோம். தற்போது அதிமுகவினர் தேர்தல் மனநிலை யில் இல்லாததால் 100 சதவீத இடங்களில் வெற்றி பெறுவதற் கான இலக்கு நிர்ணயித்து தேர்தல் களத்தில் பிரச்சார வியூகம் வகுக்க உள்ளோம்” என்றனர்.