சோழிங்கநல்லூர் அடுத்த நாராயணபுரம் பகுதியில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 2015 கனமழையின்போது கரைகள் உடைந்து குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்தது. இதை யடுத்து பொதுப்பணித் துறையினர் ரூ.20 லட்சம் தற்காலிக நிதி மூலம் ஏரியில் சீரமைப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணிகளை, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள், உபரிநீர் வெளியேறும் கால்வாய் களின் விவரங்கள் மற்றும் அதன் வரைபடங்களை ஆய்வு செய்தார். நீர் வெளியேறுவதற்காக கட்டப்பட்டு வரும் புதிய மதகின் விவரங்களை கேட்டறிந்தார்.
கடந்த பருவமழையின்போது குரோம்பேட்டை அரசு மருத்து வமனை முழுவதும் தண் ணீரில் மூழ்கியதால், தனியார் மண்டபத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை நடந்தது.
மருத்துவமனையின் பின்புறம் உள்ள வீரராகவபுரம் ஏரி ஆக்கிர மிக் கப்பட்டதும், ஏரியின் கால்வாய் தூர்ந்து போனதுமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப் பட்டது.
இந்நிலையில் குரோம் பேட்டை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மருத்துவர் களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந் தார். மழைநீரை வெளியேற்ற தேவையான டீசல் மோட்டார் களை தயார் நிலையில் வைக் கும்படியும் அறிவுறுத்தினார்.