தமிழகம்

பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை: தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது

செய்திப்பிரிவு

பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

ஒடிஷா மாநிலம் புவனேஷ் வரில் கடந்த வாரம் ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. முதல் கட்ட மாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.ராஜேஷ் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு ஒத்தி கைகள் செய்து காட்டப்பட்டன. உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜசேகர் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகைகளை செய்தனர்.

பல்நோக்கு மருத்துவமனை யில் தீ விபத்து ஏற்பட்டால் அருகே இருக்கும் நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி, அவர்களை எப்படி தூக்கி வரவேண்டும் என்பதை தத்ரூபமாக செய்து காட்டினர். தீயணைப்புக் கருவிகளை இயக்கும் முறைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் செயற்கையாக தீயை உருவாக்கி, அதை டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்களை அணைக்க வைத்து பயிற்சி கொடுத்தனர்.

இதே போன்ற தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனை மற்றும் சில மருத்துவமனைகளில் அடுத் தடுத்து நடத்தப்படவுள்ளது.

SCROLL FOR NEXT