தமிழகம்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தமிழகத்தில் மக்களைப் பாதிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் அண்மையில் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் கடந்த 2011-ல்அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அப்போதே மூடப்பட்டது. பின்னர், கைவிடப்பட்ட கிணறாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்த கிணறை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மூடுவதற்கான நடவடிக்கைகளை ஓஎன்ஜிசி மேற்கொண்டுள்ளது. அங்கு, புதிய கிணறுஅமைப்பதற்கான பணி நடைபெறவில்லை. தமிழகத்தில் மக்களைப் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் தமிழக முதல்வர்அனுமதிக்கமாட்டார். புதிய அனுமதியும் வழங்கப்படமாட்டாது என்றார்.

SCROLL FOR NEXT