சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்திய நாட்டின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும், உரிமைக்கும், நல்வாழ்வுக்கும் அடையாளமான தேசியக் கொடி குறித்து அனைவரும் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை இல்லங்களுக்கு கொண்டு வந்து பறக்கவிட மக்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்றபிரச்சாரம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மூவர்ணக் கொடியை இந்த மாதம் 13-ம்தேதி முதல் 15-ம் தேதி வரை அவரவர் இல்லங்களில் ஏற்றவோ அல்லது காட்சிப்படுத்தவோ வேண்டும் என அதிமுக தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.