தமிழகம்

ரெட் அலர்ட்: நீலகிரி, கன்னியாகுமரி விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை

செய்திப்பிரிவு

சென்னை: கனமழை காரணமாக நீலகிரி மற்றும் குமரியில் தேசிய பேரிடர் மீட்புப்படை களமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, குமரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை களம் இறக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் தலா 2 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT