சென்னை: புத்தொழில் தொடர்பாக 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சார்பில் சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்ற கண்காட்சியை முதல்வர் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசுகையில், "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த நிதியாண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிடப்படுள்ளது" இவ்வாறு முதல்வர் பேசினார்