தமிழகம்

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பாபு மருத்துவ விடுப்பில் சென்றதை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் ஆணையராக பிரபாகரனை நியமித்த உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

டிஐஜி பதவியில் சென்னை மாநகார காவல் துறையில் கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்த பிரபாகரன், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT