தமிழகம்

காமன்வெல்த் போட்டியில் தங்கம்: இந்திய வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இளம் திறமையாளர்களான ஜெர்மி லால்ரின்னுங்கா ரால்டே மற்றும் அச்சிந்தா ஷூலி இந்தியாவுக்காக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இருவரின் அற்புதமான வெற்றிக்கும், அவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைந்திடவும் எனது நல்வாழ்த்துகள்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT