சென்னை: பால் பாக்கெட்டில் அளவு குறைவாக இருப்பது தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆவின் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 3 நிறங்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட்டாக இந்த பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதாவது, 500 எம்எல் கொண்ட ஒரு பால் பாக்கெட் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால், 500 எம்எல் கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆவின் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.