நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 218 பேர் கண்களைக் கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றினர். 
தமிழகம்

நாமக்கல்லில் 218 பேர் கண்களைக் கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

நாமக்கல் பரமத்தி சலையிலுள்ள திருமண மண்டபத்தில் தனியார் பள்ளி மற்றும் தனியார் சிலம்ப பயிற்சிக் கூடம் சார்பில் 218 பேர் ஒரே இடத்தில் திரண்டு கண்களைக் கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்டின் முதன்மை அதிகாரி கே.கே.வினோத் தலைமை வகித்தார். நிறுவன தமிழக முதன்மைத் தொகுப்பாளர் எஸ். ஜனனி  மற்றும் பரத்குமார் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 218 பேர் ஒரே இடத்தில் நின்று சிலம்பம் சுற்றினர்.

இதுகுறித்து, நிறுவனத்தின் முதன்மை அதிகாரி வினோத் கூறுகையில், தூத்துக்குடியில் ஒரே இடத்தில் 210 பேர் திரண்டு ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி உலக சாதனையாக இருந்தது. அதை எங்களது நிறுவனம் பதிவு செய்தது. அதை முறியடிக்கும் வகையில தற்போது ஒரே இடத்தில் 218 பேர் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைவரும் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். இதில் பங்கேற்க வயது வரம்பில்லை. 6 வயது முதல் கலந்து கொண்டுள்ளனர். இந்த சாதனை எங்களது நிறுவனத்தில் பதிவு செய்யப்படும், என்றார்.

SCROLL FOR NEXT