தமிழகம்

பெண்கள், மாணவிகளை பாதுகாக்க ‘காவல் உதவி செயலி’ - கல்லூரிகளில் போலீஸார் செயல் விளக்கம்

என்.சன்னாசி

பெண்கள், மாணவிகளைப் பாதுகாக்கும் காவல் உதவி செயலி குறித்து போலீஸார் கல்லூரிகளுக்குச் சென்று செயல் விளக்கம் அளிக்கின்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்

அந்த வகையில் காவல் துறையினரை உதவிக்கு அழைக்கும் விதமாக அவசர அழைப்பு, புகார் அளித்தல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல் நிலையங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உட்பட காவல் துறை தொடர்பான சுமார் 60 விதமான தகவல்களைப் பெறும் வகையில் ‘ காவல் உதவி செயலி’ செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதை அனைத்து ஆன்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த லாம். குறிப்பாக பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் கல்லூரிகளுக்குச் சென்று இச் செயலியின் உபயோகம், பயன்பாடு குறித்து காவல் துறையினர் பயிற்சி அளிக்கின்றனர்.

சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு ‘காவல் உதவி செயலி’ பதிவிறக்கம், பயன்பாடு, பாதுகாப்பு குறித்து மதுரை மாநகர் போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீஸார் செயலியின் பயன்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT