கோவை பஞ்சு வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, ரூ.56 லட்சம் மதிப்பிலான நகை, பணம் உள் ளிட்டவை கொள்ளையடிக்கப் பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை, சிங்காநல்லூர் ராமானுஜ நகர் காமராஜர் சாலை யைச் சேர்ந்தவர் சுலைமான். இவரது மகன் பஷிர்(53). இவர், நூற்பாலையில் பஞ்சு வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் சொகுசு காரில் 12 பேர் வந்துள்ளனர். அவர்கள், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று பஷீரிடம் அறிமுகப்படுத்தி, அவரது குடும்பத்தினரை தனி அறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பஷீரிடம் வீட்டின் லாக்கர் சாவி மற்றும் வீட்டில் இருந்த சில ஆவணங்களை கேட்டுப் பெற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த 150 பவுன் நகை, ரூ.40 லட்சம், 6 அலைபேசிகள், 4 கண்காணிப்பு கேமராக்களின் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். பஷீரையும் காரில் ஏற்றிக்கொண்டு, சிறிது தூரத்தில் இறக்கிவிட்டு, அனுப்பி வைத்ததாக பஷீர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: ரூ.56 லட்சம் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பஷீர் வீட்டுப் பகுதியில் உள்ள கேமராக்களையும், திருட்டில் ஈடு பட்டவர்கள் பயணம் செய்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், வாகன சோத னைச் சாவடியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.