சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம்சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 1,425 தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கி 30-ம்தேதி வரை நடை பெற்றது.
இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதி வரை தூர்வாரும் பணிகள் நீட்டிக்கப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்கள்பகுதிகளில் உள்ள தெருக்களில்கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை தொடர்புடைய பகுதி அலுவலகங்களில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.