இங்கிலாந்தில் பணியாற்ற மருத்து வர்கள், செவிலியர்கள் தேவைப் படுவதாக, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்தில் பணியாற்ற மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். மருத்துவர் கள் அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் மற்றும் உள் சிகிச்சை மருத்துவம் பிரிவுகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள வர்களாக இருக்க வேண்டும்.
மருத்துவர்கள் ஜிஎம்சி பதிவு பெற்றவர்களாகவோ, ஜிஎம்சி பதிவுக்காக விண்ணப்பித்துள் ளவர்களாகவோ இருந்தால் விண் ணப்பிக்கலாம். மருத்துவர்களுக்கு அவர்கள் அனுபவத்தின் அடிப் படையில் ரூ.24.39 லட்சத்தில் இருந்து 57 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் செவிலியர்கள் தேவைப் படுகின்றனர். இவர்களுக்கு அனுபவம் அடிப்படையில் ரூ.17 லட்சம் முதல் ரூ.22.76 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் விரிவான சுய விவர குறிப்புடன், கல்வித் தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்பட விவரங்களை, ‘omcukresume@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்கைப் ஐடியுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை, 044-22502267, 22505886 என்ற தொலைபேசி எண்களிலோ, ‘www.omcmanpower.com’ என்ற இணையதளத்திலோ அறியலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.