பழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் அர.சக்கர பாணி. உடன் ப.வேலுச்சாமி எம்.பி., ஆட்சியர் ச.விசாகன் உள்ளிட்டோர். 
தமிழகம்

தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை - அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

செய்திப்பிரிவு

பழநி: தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

பழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது:

நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அடுத்த ஆண்டு அரசு கல்லுாரி தொடங்கப்படும். 25 ஆண்டுகள் பழமையான ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை பாக்கெட்களில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் 12 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. செப். 1-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

SCROLL FOR NEXT