தமிழகம்

இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று நடைபெறவிருக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாமக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பி.எம்.கே. பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதியில் ஜி. குஞ்சிதபாதம், திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கறிஞர் டி. செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது'' என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT