தமிழகம்

ஜெயலலிதா, சசிகலா 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்: வருமான வரி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் வரும் 30-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராகாததால் நீதிபதி தட்சணாமூர்த்தி இந்த வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் எழும்பூர் நீதிமன் றத்தில் திங்கள்கிழமை ஆஜரா வார்கள் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அரசு அலுவல் காரணமாக முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வில்லை. சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாதால் அவரும் ஆஜராகவில்லை' என்று கூறினார். இதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டுள்ளது. எனவே, ஜெய லலிதா, சசிகலா ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்' என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தட்சணாமூர்த்தி, ‘வழக்கு குறித்த குற்றச் சாட்டுகளை பதிவு செய்வ தற்காக வருகிற 30-ம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT