சினிமா பைனான்சியரை மிரட்டிய தாக தொடரப்பட்ட வழக்கில் பச்சமுத்துவுக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.
சினிமா பைனான்சியர் முகுல்சந்த் போத்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்ச முத்து மீது தேனாம்பேட்டை போலீ ஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தினமும் மாலை 5.30 மணிக்கு பச்சமுத்து தேனாம் பேட்டை போலீஸில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி பச்சமுத்து சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, பச்சமுத்துவுக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார். ஆனால் விசாரணை அதிகாரி கூப்பிடும்போது தவ றாமல் ஆஜராக வேண்டும். போலீ ஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பச்சமுத்துவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.