தமிழகம்

தத்கால் பாஸ்போர்ட் நேர்காணல் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு: மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், தத்கால் பாஸ்போர்ட் நேர்காணலுக்கான எண்ணிக்கை 100-ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதற்கான தேவை அதிகரித்து வருவதால் தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல் நேரத்தை குறைக்கும் வகையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தத்கால் பிரிவில் தினசரி பாஸ்போர்ட் நேர்காணலுக்கான எண்ணிக்கை 100-ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் 100 தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல் நடைமுறை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நேற்றுமுதல் அமலுக்குவந்துள்ளது.

எஞ்சிய 100 தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல், சென்னை அண்ணா சாலை அலுவலகம்
மூலம் கையாளப்படும்.

மேலும், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் 13 அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் மூலம் தினசரி 2,200 விண்ணப்பங்கள் கையாளப்படுகின்றன. 2022 ஜனவரி முதல் ஜூன்
மாதம் வரை 2.26 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 4 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் செய்திக்குறிப்பு மூலம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT