தமிழகம்

எம்.பி. மீது புகார் கூறிய பெண் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.யிடம் மனு

செய்திப்பிரிவு

சசிகலா புஷ்பா எம்.பி. குடும்பத்தார் மீது புகார் கூறிய பானுமதி, பாதுகாப்பு கேட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை அடுத்த ஆனைக்குடியை சேர்ந்த பால்கனி மகள் பானுமதி. இவரும், இவரது உறவினர் ஜான்சிராணியும், சசிகலாபுஷ்பா எம்.பி. வீட்டில் பணிபுரிந்தனர். அப்போது தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக போலீஸில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் சசிகலாபுஷ்பா எம்.பி. உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திசையன்விளையை சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் என்பவர், பானுமதிக்கு உதவியாக இருந்தார். கடந்த 11-ம் தேதி திசையன்விளை போலீஸ் நிலையம் அருகேயுள்ள சுகந்தியின் வீட்டை அடையாளம் தெரியாதவர்கள் சூறையாடினர். இந்நிலையில், வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சனும், பானுமதியும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT