தமிழகம்

தமிழகத்தில் அக்டோபரில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உள்ளன.

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT