சென்னையில் வெள்ள பாதிப்பை முழுமையாக தடுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிபு ணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க 2 மாதம் அவ காசம் தேவை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட் டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற் பட்ட பெருவெள்ள பாதிப்பால் சென்னை மாநகரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. பொதுமக் கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்தனர். இதுபோன்ற பாதிப்பு இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு எடுக்கக் கோரியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இதில் 2 மனுக்களை மட்டும் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண் டது. இந்த மனுக்கள் மீதான விசா ரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது தமிழக அரசின் வரு வாய்த்துறைச் செயலர் சந்திர மோகன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘உயர் நீதிமன்ற உத் தரவுப்படி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெள்ளத்தை தடுக்கவும், இயற்கை சீரழிவுகளில் இருந்து உடைமைகளை தற் காத்துக் கொள்ளவும் நிபுணர்கள் குழுவை அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. தகுதி வாய்ந்த பல்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர் கள், இயற்கை ஆர்வலர்களை இக்குழுவில் நியமிக்க அனைத்து துறைகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்த மான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதும் நிபுணர்கள் குழுவை நியமிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதற்கு 2 மாதம் அவகாசம் தேவைப்படும்’’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.