அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் கடந்த 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் குழு வினர் அளித்த தீவிர சிகிச்சை யால் முதல்வருக்கு காய்ச்சல் குணமானது. வழக்கமான உணவு களையும் சாப்பிடத் தொடங்கி னார். டாக்டர்களின் அறிவுறுத்த லின்படி பூரண நலம் பெறுவதற் காக மருத்துவமனையில் முதல்வர் ஓய்வு எடுத்து வருகிறார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஓய்வின்போதே அரசு மற்றும் கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நேற்று மாலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.