ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங் களில் ரயில்களின் கால அட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். அறிவிக்கும்போது ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில் களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு தயாரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரையில் இருந்த கால அட்டவணையை செப்டம்பர் 30-ம் தேதி வரையில் நீடித்து உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே, தெற்கு ரயில்வே புதிய கால அட்ட வணையை இன்று வெளியிடு கிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தின் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இரட்டை பாதை பணிகளும் முடிக்கப் பட்டுள்ளன. இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் குறித்த நேரத் துக்கு முன்பாகவே ரயில் நிலை யங்களுக்கு சென்று விடு கின்றன. எனவே, சென்னை யில் இருந்து தென்மாவட்டங் களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களின் பயணம் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.