தமிழகம்

அதிமுக கட்டுப்பாட்டை மீறியதால் தளவாய் சுந்தரம் நீக்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக கட்டுப்பாட்டை மீறியதால், முன்னாள் அமைச்சர்கள் என்.தளவாய் சுந்தரம், வைகைசெல்வன், என்.ஆர்.சிவபதி, முன்னாள் எம்பிக்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், பி.வேணுகோபால், முன்னாள் எம்எல்ஏ வி.பி.பி.பரமசிவம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலர் சங்கரதாஸ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலராக பி.எஸ்.சிவா, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலராக எம்.வி.சதீஷ், வேலூர் மாநகர் மாவட்டத்துக்கு டி.ஆர்.முரளி, வேலூர் புறநகர் மாவட்டத்துக்கு எஸ்.கோதண்டம், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு ராஜசேகரன், தெற்கு மாவட்டத்துக்கு ரத்தினசபாபதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்துக்கு டிஜி.கலைச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT