தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவிகளில் 29 காலியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் பொருட்டு கடந்த 25.06.2012 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப் பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த பதவிகளுக்கான மறு-எழுத்துத்தேர்வு 01.08.2015 மற்றும் 02.08.2015 அன்று நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு 09.05.2016, 10.05.2016 மற்றும் 30.08.2016 ஆகிய நாட்களில் நடைபெற்றது. நேர்காணலுக்கு 64 விண்ணப்பதாரர்கள் தற்காலிக மாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 2 பேர் அக்டோபர் 4-ம் தேதி அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக் கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் மட்டுமே நேர் காணலுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையே 04.10.2016 மற்றும் 05.10.2016 ஆகிய நாட்களில் நடைபெறும்.
நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பாணை விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டுள்ளது. நேர்காணலுக்கான அழைப்பாணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கான அழைப்பாணையை இந்த இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. அழைக்கப் பட்டோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். யாருக்கும் மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அடுத்தகட்ட தெரிவு நடவடிக்கைகளுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.