தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது என்று அதன் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். அவர் விரைவில் நலம்பெற்று அரசு மற்றும் கட்சிப்பணிகளை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

காவிரி பிரச்சினை நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால், டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் துன்பப்படும் இத்தகைய வேளையில், தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், தமிழக வாழ்வுரிமையை பெயரில் தாங்கியுள்ள எங்கள் இயக்கம், காவிரி பிரச்சினையை மையப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை சிறையிலிருந்த கைதி ஒருவர் அண்மையில் தாக்கினார். இது கண்டிக்கத்தகக்து. பேரறிவாளனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் பதற்றத்தில் உள்ளார். எனவே, பேரறிவாளனை மூன்று மாதங்களுக்கு பரோலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வேல்முருகன் கூறினார்.

SCROLL FOR NEXT