தமிழகம்

200 வார்டுகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான தேமுதிக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர் தலில் ம.ந.கூட்டணி, தமாகாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து வெளிப்படை யாக அறிவிக்காமல் இருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 20-ம் தேதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாலர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக்கூட்டத்தில், தேமுதிக தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 21-ம் தேதி முதல் தேமுதிக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். வேட்பாளர் பட்டியலில் பகுதி மற்றும் வட்டச் செயலாளர்களுக்கு பெருமளவு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வார்டு 1-ல் சித்ரா ரகுராமன், வார்டு 4-ல் ஏ.பவுல்ராஜ், வார்டு 11-ல் புஷ்பலதா, வார்டு 15-ல் மலர்விழி ரஞ்சித்குமார், வார்டு 21-ல் மதியழகன், வார்டு 25-ல் சரஸ்வதி, வார்டு 30-ல் ஆர்.ஜி.சிவானந்தம், வார்டு 35-ல் பாபு ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்பி நா.பாலகங்கா போட்டியிடும் 78-வது வார்டில் எஸ்முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் போட்டியிடும் 7-வது வார்டில் எம்.முரளி, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் போட்டியிடும் 80-வது வார்டில் வி.கே.குமார், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன் போட்டியிடும் 166-வது வார்டில் ஆர்.உமாபதி, முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் போட்டியிடவுள்ள 184-வது வார்டில் எம்.சுப்பிரமணி வேட்பாளர்களாகி உள்ளனர்.

இன்றைய தினம் அமாவாசை என்பதால் இன்று தேமுதிக வேட்பாளர்கள் பெருமளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய வுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்டோபர் 10-ம் தேதி தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 5 இடங்களில் விஜயகாந்த் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

SCROLL FOR NEXT