தமிழகம்

தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று (ஜூலை 27) கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

பிளஸ் 2 சிபிஎஸ்இ வாரிய தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2,07,361 பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இதில் 1,62,492 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.1,49,369 பேர் சான்றிதழ்களை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 163 கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT