தமிழகம்

முத்துப்பேட்டையில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை: கிளை மேலாளர் உட்பட 3 பேர் மீது புகார்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ள செம்ப டவன்காட்டைச் சேர்ந்தவர் நாக ராஜன்(48). பட்டுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக டெப்போவில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். மேலும், அதிமுக தொழிற்சங்கத்தில் பொரு ளாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் செம்படவன்காட்டில் உள்ள தனது வீட்டில் நாகராஜன் தூக்கிட் டுத் தற்கொலை செய்துகொண் டார். தனது தற்கொலைக்கு காரணம் பட்டுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் மற்றும் சிலர் எனக் கூறி, அவர்களின் பெயர்களை தனது டைரியில் நாகராஜன் எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து, நாகராஜனின் மனைவி இந்திரா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில், கிளை மேலாளர் உட்பட போக்குவரத்து ஊழியர்கள் 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பட்டுக்கோட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் நாகராஜன் தாக்கப்பட்டதாகவும், அதை அவ மானமாகக் கருதி, மன வேதனை யில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் நேற்று தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்துநர் விஜயேந்திரன் தற்கொலை செய்துகொண்டார். அதை, நிர்வாகமும், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரும் இயற்கை மரணம் என மூடி மறைத்துள்ளனர்.

அதனை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்ட காரணத் துக்காக, கடந்த ஒன்றரை மாதங் களாக கணக்காளர் நாகராஜனுக்கு பணி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற் கொலை செய்து கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT