தமிழகம்

சின்னசேலம் மாணவி உயிரிழப்பு வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சின்னசேலம் தனியார் பள்ளியில்பிளஸ் 2 மாணவி சந்தேகத்திற்கி டமான வகையில் உயிரிழந்த விவகாரத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் உயிரிழப்பை சந்தேக உயிரிழப்பாக வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு முதன் முதலில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் விசா ரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 17-ம் தேதிமாணவி மரணத்திற்கு நீதி கேட்டுநடைபெற்ற போராட்டம் கலவரமாகமாறியது. இதையடுத்து மாணவி யின் இறப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் கலவரம் குறித்து விசா ரணை நடத்த சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு போலீஸாரை தமி ழக அரசு நியமித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷர்வன் குமார், காவல் கண்காணிப்பாளராக பகலவன் புதிதாக பொறுப்பேற்றனர்.

இதற்கிடையே, இவ்வழக்கை முதலில் கையாண்ட டிஎஸ்பி ராஜலட்சுமியும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் கள்ளக்குறிச்சியின் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT