தமிழகம்

செஸ் ஒலிம்பியாட்: அதிகாலையில் வீடு தேடி வந்த தம்பி

செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதை பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக தம்பி சிலை வைக்கப்பட்டுள்ளது. நேப்பிர் பாலம் செஸ் போர்டு போன்று வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. பெரிய கட்டிடங்களில் பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளில் தம்பியுடன் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்று இருந்தது.

SCROLL FOR NEXT