மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி மக்கள் விரோத கல்வி கொள்கைக்கு எதிரான கூட்டுப் போராட்டக்குழு அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப் பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப் பாட்டத்தை தொடங்கிவைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
புதிய கல்விக்கொள்கை சமூக நீதிக்கு முற்றிலும் எதிராக உள் ளது. இதன்மூலம் கல்வியில் இந்துத்துவ கருத்துகளை திணிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் அடிப் படையையே மாற்றப் பார்க்கி றார்கள். இது, பழைய குலக் கல்வி திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி டெல்லி சென்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைதாகி சிறைச் சாலைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன் னாள் எம்பி சா.பீட்டர் அல் போன்ஸ், பேராயர் எஸ்றா சற்குணம், இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் வீர பாண்டியன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், முன்னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடு தலை ராஜேந்திரன், ஆதி தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன், மே 17 அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன், டிசம் பர் 3 அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தீபக், பேராசிரியை ரேவதி உள்ளிட்டோரும் பேசினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்துப் பேசும்போது, “இந்துத்துவமயம், தனியார் மயம் என்ற 2 கோட்பாடுகளை மையமாகக் வைத்தே புதிய கல்விக்கொள்கையை தயாரித் துள்ளனர். கல்வியை 100 சதவீதம் தனியார்மயமாக்குவதை அது ஏற்றுக்கொள்கிறது. சமூக நீதி குழிதோண்டி புதைக்கப் பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளருமான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிமுகவுரை ஆற்றினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.பிரிட்டோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.